தெருக்களில் தொழுகை செய்தால் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ரத்து., உ.பி. காவல்துறை அதிரடி
தெருக்களில் தொழுகை செய்தால் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரப் பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.
மசூதிகள் மற்றும் பைஸ்-இ-ஆம் இன்டர் கல்லூரி மைதானம் போன்ற நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஈத் தொழுகை நடத்த உத்தரப் பிரதேச மாநில மீரட் காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.
விதிகளை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீரட் எஸ்.பி ஆயுஷ் விக்ரம் சிங் கூறியுள்ளார்.
இதனை மீறி பொது இடங்களில் தொழுகை செய்தால் ஃபிஐஆர் பதிவு, கைது, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ட்ரோன்கள், வீடியோ கண்காணிப்பு, பிரவின்சியல் ஆயுத காவல்படை (PAC) மற்றும் ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) பயன்படுத்தப்படுவதாக விக்ரம் சிங் தெரிவித்துளார்.
கடந்த ஆண்டு, தெருக்களில் தொழுகை நடத்திய 200 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், RLD தலைவர் ஜயந்த் சவுதரி இந்த காவல்துறை அறிவிப்பை விமர்சித்து, "Orwellian 1984 policing" என்று சமூக ஊடகங்களில் குறித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |