கடந்த 6 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது! வெளியான திடுக் தகவல்
கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனச்சோர்வு, பைத்தியம், மனநோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முன்பு கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உளவியல் அல்லது நரம்பியல் பிரச்சினையைால் மீண்டும் பாதிக்கப்பட்டதாகவும் அல்லது புதிதாக பாதிப்பு ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் அல்லது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்னும் அதிக ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது மன அழுத்தத்தின் விளைவுகள் மற்றும் வைரஸ் மூளையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் விளைவுகளால் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் அமெரிக்காவில் அரை மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளின் மின்னணு மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் மூலம் 14 பொதுவான உளவியல் அல்லது நரம்பியல் பாதிப்புகளில் ஒன்றால் நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதை கண்டறிந்தள்ளனர்.
