மரணம் உறுதி என கணித்த போதகர்... தேவாலயத்தில் இருந்து வெளியேறிய நபர் படுகொலை
பிரேசில் நாட்டில் தெருவில் கொல்லப்படுவார் என போதகரால் கணிக்கப்பட்ட நபர் தேவாலயத்தில் இருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருவில் காத்திருக்கும் மரணம்
பிரேசில் நாட்டின் காரடிங்கா பகுதியை சேர்ந்தவர் Kelber Couto Lima. சம்பவத்தன்று தமது காதலியுடன் வழக்கமாக செல்லும் தேவாலயத்திற்கு அவர் சென்றுள்ளார்.
Image: Social media
இந்த நிலையில், திடீரென்று அந்த தேவாலயத்தின் போதகர் Kelber Couto Lima-வை தடுத்து நிறுத்தி காரடிங்கா சதுக்கத்தில் இருந்து விலகி இருக்குமாறு கூறியுள்ளதுடன், தெருவில் மரணம் காத்திருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
ஆனால், போதகரின் கணிப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்திருந்த 30 வயதான கெல்பர் தேவாலயத்தில் இருந்து வெளியேற, தலையில் இருந்து ரத்தம் வழிய தெருவில் இருந்து அவரது சடலம் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போதகர் எச்சரிக்கை விடுத்திருந்ததும், மக்களில் சிலர் அதை கேட்டதும் பொலிஸ் விசாரணையில் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், கொல்லப்படும் போது கெல்பர் வீட்டுச்சிறையில் இருந்துள்ளார் எனவும், அனுமதி பெற்றே தேவாலயம் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கின்றனர்.
இளம்பெண் சித்திரவதை
கெல்பர் கொலை வழக்கில் 18 வயதான இளைஞர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். கடந்த மாதம் பிரேசில் நாட்டில் 21 வயதான பெண் ஒருவரின் எரிந்த சடலம் பீப்பாய் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
@getty
சாத்தான், மந்திரவாதம் உள்ளிட்டவையில் அதிக நாட்டம் கொண்ட காதலனால் குறித்த இளம்பெண் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாகவே விசாரணையில் அம்பலமானது.
அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார், குறித்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.