என்னை வழிநடத்திய தந்தை, என் ஹீரோ சிரஞ்சீவி! பிரித்தானிய அரசின் விருது பெற்றதற்கு சகோதரர் பவன் கல்யாண் வாழ்த்து
பிரித்தானிய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு, ஆந்திர துணை முதல்வரும் அவரது சகோதரருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி
லண்டன் நாடாளுமன்றத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பிரித்தனிய அரசின் "Lifetime Achievement Award" வழங்கப்பட்டது.
இந்த விருதை பெறும் முதல் இந்தியர் எனும் பெருமையை சிரஞ்சீவி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிரஞ்சீவியின் சகோதரரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் வாழ்த்து
அவர் தனது எக்ஸ் பதிவில், "பிரித்தானிய நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது அண்ணன் சிரஞ்சீவியின் புகழை மேலும் உயர்த்தும். ஒரு சாதாரண நடுத்தர வர்க்க கலால் காவலரின் மகனாக வாழ்க்கையைத் தொடங்கி, தனது சொந்த பலத்தாலும், தனது கலைத் தாயின் ஆசிகளாலும், திரைப்படத் துறையில் ஒரு மெகாஸ்டாராக உயர்ந்தார்.
நான்கரை தசாப்தங்களாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்வித்தார். 9 பிலிம்பேர் விருதுகளையும், சிறந்த நடிகருக்கான 3 நந்தி விருதுகளையும் தனது நடிப்பால் வென்றார். மேலும் நடிப்புக்கு ஒத்தவராக மாறினார்.
அவரது தம்பியாகப் பிறந்ததில் நான் எப்போதும் பெருமைப்படுவேன். சிரஞ்சீவி அவர்களை ஒரு மூத்த சகோதரனை விட ஒரு தந்தையைப் போலவே நான் கருதுகிறேன். வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தபோது எனக்கு வழி காட்டியவர் அவர். என் மூத்த சகோதரர் சிரஞ்சீவியே என் வாழ்க்கையின் ஹீரோ" என்றார்.
యునైటెడ్ కింగ్ డం పార్లమెంట్ అందించనున్న జీవిత సాఫల్య పురస్కారం అన్నయ్య @KChiruTweets గారి కీర్తిని మరింత పెంచనుంది
— Pawan Kalyan (@PawanKalyan) March 20, 2025
సాధారణ మధ్యతరగతి ఎక్సైజ్ కానిస్టేబుల్ కొడుకుగా జీవితం మొదలుపెట్టి, స్వశక్తితో, కళామతల్లి దీవెనలతో, చిత్ర రంగంలో మెగాస్టార్ గా ఎదిగి, నాలుగున్నర దశాబ్దాలుగా… pic.twitter.com/aIk6wxCk2q
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |