அமைதி பேச்சுவார்த்தை ரஷியன் ரவுலட் விளையாட்டு போன்றது...ஆபத்து நிறைந்தது: உக்ரைன் தகவல்
- ரஷ்ய படைகளுடன் பேச்சுவார்த்தை என்பது ரஷியன் ரவுலட் விளையாட்டு போன்றது.
- அமைதி பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை வெளியிட்ட உக்ரைன்
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆபத்தான விளையாட்டு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறினார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 175 நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று சுமார் 100 நாட்களை கடந்துள்ளது.
மேலும் இதுவரை நடைபெற்ற மூன்று சுற்று அமைதி பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு முக்கிய போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ளப்படாமல் முடிவடைந்தது.
Negotiating with RF means playing "Russian roulette" game with a full reel and a fatal ending for everyone. War continuation, terror and criminal blackmail. @ZelenskyyUa announced the key conditions of negotiation process. The main – ?? troops withdrawal from all ?? territories.
— Михайло Подоляк (@Podolyak_M) August 19, 2022
இந்தநிலையில் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒத்துழைப்பு வழங்கும் என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்த கருத்தில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆபத்தான விளையாட்டு என்று தெரிவித்தார்.
Sky News
கூடுதல் செய்திகளுக்கு: திராட்சை, உலர்ந்த பழங்களுக்கு மாற்றாக கச்சா எண்ணெய்: ரஷ்யா ஆப்கானிஸ்தான் இடையே ஒப்பந்தம்
மேலும் ரஷ்ய படைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது 'ரஷியன் ரவுலட்'(Russian roulette) விளையாட்டை முழு ரீலுடன் விளையாடுவது மற்றும் அனைவருக்கும் ஒரு அபாயகரமான முடிவு என்றும் தெரிவித்தார்.