ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல்: ஜெட்டாவில் தொடங்கிய அமைதி பேச்சுவார்த்தை
மாஸ்கோ ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில் ஜெட்டாவில் உக்ரைன் போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
மாஸ்கோ மீது தாக்குதல்
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் முக்கியமான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மாஸ்கோ மீது கிட்டத்தட்ட 337 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ரஷ்யா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இது என்று விவரிக்கப்படுகிறது.
தொடங்கியது போர் நிறுத்த பேச்சுவார்த்தை
ரஷ்யா மீது தாக்குதல் செய்திகள் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உக்ரைன்-அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
ட்ரோன் தாக்குதலின் எதிரொலிகள் எதிரொலித்துக் கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்ட தொடங்கியுள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி எர்மாக், எக்ஸ் சமூக ஊடக தளத்தின் மூலம் பேச்சுவார்த்தைக்கான காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
பேச்சுவார்த்தை மேசையில் பிரதிநிதிகள் அமர்ந்திருக்கும் படங்களை வெளியிட்டுள்ள அவர் பங்கேற்பாளர்கள் "வேலையில் இறங்கியுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தைகள் “ஆக்கப்பூர்வமாக தொடங்கின” என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |