சித்திரவதை, கூட்டு துஸ்பிரயோகம்... அமைதிப்பூங்காவான பகுதி பற்றியெரியும் போர்க்களமாக மாறிய கதை
இந்திய மாகாணமான மணிப்பூரில் இரு இனங்களுக்கு இடையே வெடித்த வன்முறையால் அமைதிப்பூங்காவான பகுதி பற்றியெரியும் போர்க்களமாக மாறியது.
காட்டுமிராண்டித்தனமான செயல்களால்
மே மாதம் ஏற்பட்ட மோதல்களை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஒரு காலத்தில் அமைதியான பகுதிகளாக அறியப்பட்டவை தற்போது மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினருக்கும் இடையிலான காட்டுமிராண்டித்தனமான செயல்களால் அடையாளம் காண முடியாத வகையில் மாறிப்போயுள்ளது.
@reuters
தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், பெண்கள் சிறார்கள் என கூட்டு பலாத்காரத்திற்கு இரையாக்கப்பட்டதும், உயிருடன் மக்களை எரித்து கொல்லப்பட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஆனால் மணிப்பூர் மாகாணத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், நாட்டை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி அரசாங்கமும் வேடிக்கை பார்த்ததாகவே அங்குள்ள அப்பாவி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குக்கி பெண் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் நூலிழையில் ஆயுதம் ஏந்திய குழு ஒன்றிடம் இருந்து தப்பியதாக குறிப்பிட்டுள்ளனர். 42 வயதான அந்த அரசாங்க ஊழியர் தெரிவிக்கையில்,
@ap
மோடி அரசாங்கத்தின் மெளன அனுமதி
குக்கி இன மக்களை ஒவ்வொருவராக தேடிச் சென்று உயிருடன் கொளுத்துவோம் என மைத்தேயி சமூக ஆண்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது குடியிருப்புக்கும் 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று மைத்தேயி இன மக்களால் தீக்கிரையாக்கப்பட்டதையும், விடியும் வரையில் பதுங்கியிருந்த அந்த குடும்பம், பகலில் வீட்டை விட்டு வெளியேறி தப்பியுள்ளது.
ஆனால் தங்கள் வீட்டு மொத்தமாக சூறையாடப்பட்டதை பின்னர் தெரிந்து கொண்டுள்ளனர். சுமார் 10,000 ராணுவ வீரர்கள், அசாம் ரைபிள்ஸ் பிரிவினர், உள்ளூர் பொலிசார் என மணிப்பூர் மாகாணத்தில் குவிக்கப்பட்டும், அவர்களால் அமைதியை நிலைநாட்ட முடியாமல் போனது.
@afp
இதனாலையே, இந்த இன மோதல்களின் பின்னணியில் மாகாண அரசாங்கம் மற்றும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் மெளன அனுமதி இருப்பதாக மக்கள் சந்தேகின்றனர்.
மே மாதம் 3ம் திகதி முதல் ஜூலை 29ம் திகதி வரையில் மணிப்பூர் கலவரத்தில் சிக்கி 181 பே கொல்லப்பட்டுள்ளதுடன் 300க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். சுமார் 54,500 பேர்கள் பாதுகாப்பு கருதி இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |