சிறுமியை திருமணம் செய்ய முயன்ற பிரித்தானியர் கைது: வெளியாகியுள்ள திடுக் தகவல்

Marriage Paris
By Balamanuvelan Jun 24, 2025 12:50 PM GMT
Report

 பிரான்சிலுள்ள டிஸ்னிலேண்ட் பாரீஸ் என்னும் தீம் பார்க்கில் 9 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற பிரித்தானியர் கைது

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டிஸ்னிலேண்ட் பாரீஸுக்கு மக்கள் வரத்துவங்கும் முன், பிரித்தானியர் ஒருவர், மணப்பெண் போல உடையணிந்த ஒரு 9 வயதுச் சிறுமியுடன் அங்கு வந்துள்ளார்.


அவருடன், உக்ரைன் நாட்டவரான அந்தச் சிறுமியின் தாயும் இருந்துள்ளார்.

அந்தச் சிறுமியை உயரமாக காட்டுவதற்காக அவளுக்கு நான்கு இஞ்ச் உயர ஹைஹீல்ஸ் அணிவிக்கப்பட்டிருந்திருக்கிறது. 

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற பிரித்தானியர் கைது: வெளியாகியுள்ள திடுக் தகவல் | Pedo Arrested In Paris Disneyland Child Marriage

திருமணத்துக்காக சுமார் ஏராளமான விருந்தினர்கள் காத்திருக்க, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்ட ஒரு இடத்தில் இசை நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. 

லண்டனிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்

லண்டனிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்

இந்த விடயம் குறித்து தீம் பார்க் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த பிரித்தானியரைக் கைது செய்துள்ளார்கள். உடனடியாக திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் அதிகாரிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அது ஒரு திருமணம் அல்ல, நூறு துணை நடிகர்களுடன் அரங்கேற்றப்பட இருந்த போலி நிகழ்ச்சி என குறிப்பிடப்பட்டிருந்தது.

வெளியாகியுள்ள திடுக் தகவல்

ஆனால், அந்த திருமணம் தொடர்பில் இன்று திடுக்கிடவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற அந்த பிரித்தானியர் ஏற்கனவே, சிறுபிள்ளைகளை சீரழித்த குற்றங்களுக்காக தேடப்படும் ஒரு நபர். 

அவருக்கு 22 வயது என முன்னர் குறிப்பிடப்பட்ட நிலையில், அவருக்கு உண்மையில் 39 வயது என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள். 

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற பிரித்தானியர் கைது: வெளியாகியுள்ள திடுக் தகவல் | Pedo Arrested In Paris Disneyland Child Marriage

சிறார் பாலியல் குற்றங்களுக்கான பதிவேட்டில் இடம்பெற்றுள்ள அந்த பிரித்தானியரை பொலிசார் பிரித்தானியாவில் தேடிக்கொண்டிருக்க, அவர் தலைமறைவாகி பிரான்சில் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.

பிரான்சிலிருக்கும்போது மீண்டும் ஒரு சிறார் குற்றத்தில் ஈடுபட இருந்த அவரைக் குறித்து தீம் பார்க் அலுவலர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், அந்தச் சிறுமியின் தாயான உக்ரைன் நாட்டவரான ஒரு 41 வயதுப் பெண், சிறுமியின் தந்தையாக நடிக்கவந்த லாத்வியா நாட்டவரான ஒரு 55 வயது நபர், சகோதரியாக நடித்த லாத்வியா நாட்டவரான ஒரு 24 வயது இளம்பெண் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

200 பெரியவர்கள், 100 சிறுவர்கள் ஆகிய துணை நடிகர்களுடன், 115,000 பவுண்டுகள் செலவில் திட்டமிடப்பட்டிருந்த இந்த திருமணத்தை சமூக ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்பவும் சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டிருந்திருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US