ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கை: திட்டமிடும் பென்டகன்: குழப்பத்தில் டிரம்ப்
ஈரானில் தரைவழித் தாக்குதலை முன்னெடுக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானில் தரைவழித் தாக்குதல்
ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர் வான்வழித் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக தரைவழி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தரைவழி தாக்குதல் என்பது பல வாரங்கள் நீடிக்க கூடிய இராணுவ நடவடிக்கை என்றாலும், இது வரையறுக்கப்பட்ட நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்படும் என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்டகனின் திட்டமிடல் ஒருபுறம் நடந்தாலும், இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி டிரம்பிடம் தான் உள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்பின் நிலைப்பாடு இன்னும் தெளிவற்றதாக இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஈரானில் தரைவழி தாக்குதல் என்பது நேர விரயம் என்றும், ஈரான் ஏற்கனவே தன்னுடைய வலிமைகளை இழந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |