ஹார்முஸில் கண்ணி வெடிகளை அகற்ற 6 மாதம் ஆகலாம் - பெண்டகன் சொன்ன தகவல்
ஹார்முஸ் நீரிணையையில் கண்ணி வெடிகளை அகற்ற இன்னும் 6 மாதம் ஆகலாம் என பெண்டகன் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஹார்முஸ் நீரிணையில் இன்னும் அமைதி ஏற்படவில்லை.
ஹார்முஸ் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். முற்றுகையை நீக்கினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்று ஹார்முஸ் பகுதியில் உள்ள 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரானின் IRGC பிரிவு தாக்குதல் நடத்தியதோடு, 2 கப்பல்களை சிறைபிடித்துள்ளது.
உலகின் எண்ணெய் போக்குவரத்தில் 20% இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. போர் தொடங்கியது முதலே ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஈரான், கப்பல் போக்குவரத்தை முடங்கியுள்ளது.

இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும் உயர்ந்து வருகிறது.
போர் தொடங்கியதும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணி வெடிகளை பதிக்க தொடங்கியதாக தகவல் வெளியானது.
ஆனால், கண்ணி வெடிகளை பதிக்கும் போது, அது எந்த இடத்தில் பதித்தது என்பதனை ஈரான் பதிவு செய்யவில்லை என்பதில் அதை அகற்றுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
கண்ணி வெடிகளை அகற்ற 6 மாதம்
தற்போது பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவிற்கான ஒரு இரகசிய விளக்கக் கூட்டத்தில், ஈரான் பதித்துள்ள கண்ணிவெடிகளின் “ஸ்மார்ட்” தொழில்நுட்பத்தின் காரணமாக, நீரிணையைப் பாதுகாக்கும் பணி முன்பு எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானது.
இந்த கண்ணி வெடிகளை அகற்ற குறைந்தது இன்னும் 6 மாத காலம் ஆகலாம் என பெண்டகன் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவை பழமையான கயிற்றால் பிணைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இல்லை என்பதால், தொலைநிலைத் தூண்டிகள் மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய இருப்பிடக் கண்டறிதல் ஆகியவற்றின் பயன்பாடு, வழக்கமான தேடுதல் உபகரணங்கள் மூலம் அமெரிக்கக் கடற்படையினர் அவற்றைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்வதை கடினமாக்குகிறது என தெரிவித்துள்ளனர்.
வழக்கமான தரைவழித் தொடர்பு கண்ணிவெடிகளைப் போல் இல்லாமல், இந்த கண்ணிவெடிகள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிறிய, வேகமாகச் செல்லும் படகுகள் மூலம் இவற்றைத் தொலைவிலிருந்து நிலைநிறுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதனை கேட்டு விரக்தியடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், இதனால் உலகளாவிய எரிசக்தி விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் என அச்சமடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |