அமெரிக்காவில் ட்ரொன் பயிற்சி பெரும் உக்ரைன் வீரர்கள்! பென்டகன் அதிகாரி தகவல்
ரஷ்ய போர் விமானங்களை ட்ரொன்களை பயன்படுத்தி எளிமையாக தாக்கி அழிக்க உக்ரைன் இராணுவ வீரர்கள் அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி எடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் கொடிய ஸ்விட்ச் பிளேட் ட்ரோன்களை (Switchblade drones) இயக்க உக்ரேனிய வீரர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பு அமெரிக்காவில் ஏற்கனவே இருந்த உக்ரேனிய துருப்புக்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பென்டகன் அதிகாரி ஜான் கிர்பி தெரிவித்தார்.
உக்ரைன்-ரஷ்யா போரின் 43-வது நாள்: சமீபத்திய முக்கிய தகவல்கள்
அவர்கள் அமெரிக்காவில் இருந்ததால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், அவர்களுக்கு ஸ்விட்ச் பிளேட் ட்ரோன்களுடன் இரண்டு நாள் பயிற்சி அளிக்கபடுவதாகவும், அவர்கள் உக்ரைனுக்கு திரும்பிச் சென்று உக்ரேனிய இராணுவத்தில் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றும் கிர்பி கூறுகிறார்.
தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் 100 ட்ரோன்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மார்ச் 16 அன்று, மற்ற ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளில் வாஷிங்டன் உக்ரேனியர்களுக்கு அனுப்புவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்கா செவ்வாயன்று (ஏப்ரல் 5) உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உதவியை வெளியிடுவதாக அறிவித்தது.
