உக்ரைன்-ரஷ்யா போரின் 43-வது நாள்: சமீபத்திய முக்கிய தகவல்கள்
Russia
Ukraine
Ukraine War
Ukraine Russia News
Ukraine Russia Latest News
By Ragavan
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 43-வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், சமீபத்திய மிக முக்கியமான தகவல்களை இங்கே பார்ப்போம்.
உக்ரைன் போரின் பாரிய புதுப்பிப்புகள்:
- மாரியுபோல் நகரத்தில் இதுவரை 210 குழந்தைகள் உட்பட 5100 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நகர மேயர் வாடிம் போய்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.
- தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறியதாக பென்டகன் கூறியுள்ளது. கிழக்கு மண்டலத்தில் ரஷ்யா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது.
- Bucha நகரத்தில் ரஷ்ய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து விளாடிமிர் புடினின் மகள்கள் மரியா வொரொன்ட்சோவா மற்றும் கத்தரினா திகோனோவா ஆகியோருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அவர்கள் மீது தடை விதிப்பது குறித்து திட்டமிட்டுவ்ருகிறது.
- ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சில் கூடியது. இதில், ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய்க்கு தடை விதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- மரியுபோல் மனித வழித்தடத்தை (Human Corridor) ரஷ்யா மூடிவிட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். தற்போது இங்கு 1.60 லட்சம் பேர் சிக்கியுள்ளனர்.
- புச்சாவில் ரஷ்ய இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு இடிபாடுகள் மற்றும் குப்பைகள் மட்டுமே காணக்கூடிய நிலையில், உக்ரேனிய நகரமான மரியுபோலின் 90% அடிப்படைக் கட்டமைப்புகள் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
- உக்ரைன் படைகள் தனது Kursk எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அப்பகுதியில் மோட்டார்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குர்ஸ்க் கவர்னர் கூறியுள்ளார்.
- புச்சா தாக்குதலுக்குப் பிறகு, மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்திற்கு (வியாழன்) இன்று ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தின், வாக்கெடுப்பில் ரஷ்யா கவுன்சிலில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
- பிரித்தானியா ரஷ்யா மீது அதிக தடைகளை விதித்துள்ளது, நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்கின் சொத்து பரிவர்த்தனைகளுக்கு முழுமையான தடை வைத்துள்ளது மற்றும் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவிற்கு செல்லும் அனைத்து முதலீடுகளையும் நிறுத்தியது.
- ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைன் ராணுவத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஜாவெலின் ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
- உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் எரிசக்தி தேவைகளுக்காக EU ரஷ்யாவிற்கு சுமார் 1 பில்லியன் யூரோக்களை செலுத்தியுள்ளது. பிப்ரவரி 24 முதல் ரஷ்யாவிற்கு 35 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
- உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கை நேற்று ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்தது. தற்போது இங்கு சேத மதிப்பீடு நடைபெற்று வருகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US