தலிபான்கள் தலையை துண்டித்துவிடுவார்கள்.. கதவை திறங்கள்! காபூல் விமான நிலையத்தில் ஆப்கான் இளம் பெண் செய்த செயல்: கலங்க வைக்கும் காட்சி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தின் கதவை திறக்குமாறு இளம் பெண் உட்பட ஆப்கானியர்கள் பலர் அமெரிக்க இராணுவத்திடம் கதறிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, காபூலிருந்து பயணிகள் விமானச்சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.
இதனையடுத்து, காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்த அமெரிக்க இராணுவப் படை, அங்கிருந்த மக்களை வெளியேற்ற, தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற வசதியாக விமான நிலையம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
அதேசமயம், காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க இராணுவ விமானத்தின் சக்கரத்தில் பயணத்த ஆப்கானியர்கள் 3 பேர், நடுவானிலிருந்து கீழே விழுந்து பலியான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயில்களில் குவிந்த ஆப்கானியர்கள், தங்களை உள்ளே விடுமாறு கதறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
At #kabulairport gates where the US forces controlling, people crying and begging US forces to allow them to pass the gates otherwise the Taliban will come and will behead them. pic.twitter.com/wzxXJf2ngL
— Natiq Malikzada (@natiqmalikzada) August 18, 2021
குறித்த வீடியோவில், ஆப்கான் இளம் பெண் ஒருவர், தலிபான்கள் வந்து தலையை துண்டிடுத்து விடுவார்கள், தயவு செய்து நாங்கள் தப்பிக்க கதவை திறந்து எங்களுக்கு உதவுங்கள் என அமெரிக்க இராணுவ வீரர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.