கடற்கரை மணலில் தங்க வேட்டையை தொடங்கிய மக்கள்.., இந்தியாவில் எங்கு நடக்கிறது?
இந்தியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் தங்க வேட்டையில் மக்கள் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்க வேட்டை
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், கிழக்கு கோதாவரியில் உள்ள உப்பாடா கடற்கரையில் தங்கத்தை கண்டுபிடிக்கும் பணியில் மக்கள் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்குள்ள உள்ளூர்வாசிகள் கடற்கரை மணலில் ஒதுங்கியிருக்கக்கூடிய விலைமதிப்பற்ற தங்கத் துகள்கள் மற்றும் தங்க மணிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தானியங்கள், கட்டிகள் மற்றும் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் உட்பட ஆந்திர உள்ளூர்வாசிகள் கடற்கரை மணலை சலித்து தேடி வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு சுமார் 3,500 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சிலர் சேகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தங்கத்தை வாங்கும் வர்த்தகர்கள் வழக்கமாக சிறிய தங்கங்களுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை கொடுப்பதாகவும், பெரிய தங்கங்களுக்கு ரூ.2000 வரை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
கடற்கரை மணலில் தங்கம் புதைந்து கிடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் தங்க வேட்டை காரணமாக உப்பாடா கடற்கரை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறுவதற்கு சாத்தியம் உள்ளது.
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த கடற்கரையை சர்வதேச இடங்களாக மாற்ற திட்டமிட்டுள்ள நிலையில், உள்ளூர்வாசிகள் தங்க வேட்டைக்காகவே இங்கு தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |