சுமார் 7 தலைமுறையாக தீபாவளி கொண்டாடாமல் இருக்கும் கிராமம்: வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 7 தலைமுறைகளாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் இருக்கும் கிராமம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 தலைமுறைகளாக தீபாவளி கொண்டாடாத கிராமம்
இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ரனஸ்தலம் அருகே புன்னானா பாலம் என்ற கிராமத்திலேயே இந்த சம்பவம் 7 தலைமுறைகளாக நடந்துக்கொண்டு இருக்கிறது.
இந்த கிராமத்தில் 2000 இற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 95 சதவீதத்திற்கும் அதிகமாக புன்னானா என்ற தலைமுறையினரே இருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டே தான் இருந்தார். ஆனால் ஒரு வருடத்தில் நிகழந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது துரதிர்ஷ்டவசமாக பல சம்பவங்கள் நிகழந்துள்ளன. இதன் காரணமாகவே இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடமல் இருகின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த சம்பவம்
தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த புன்னானா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை பாம்பு கடித்து இறந்தது.
அதையடுத்து, பண்டிகை முடிந்த 3 ஆவது நாளில் 2 காளைகள் இறந்தன. இந்த இரு சம்பவங்கள் இரண்டும் அந்த கிராமத்தையே அதிர்ச்சியில் உலுக்கியது.
இதனாலேயே அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தீபாவளிக் கொண்டாடினால் துரதிர்ஷ்டம் என நம்பத்தொடங்கினர். இதனால் ஆண்டுதோறும் அவர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுவதில்லை.
தலைமுறை தலைமுறையாக எப்போதும் தீபாவளிக் கொண்டாட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். ஆகவே படித்த இளைஞர்களும் இதை கொண்டாட வேண்டும் என்று முன்வரவில்லை.
தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் வெளியூர்களில் பெண் எடுத்திருந்தால் அவர்கள் மாமனார் வீட்டுக்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம்.
ஆனால் உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கொண்டாட முடியாத நிலையில் இருகின்றனர்.
மேலும் கிட்டத்தட்ட 7 தலைமுறைகளாக இந்த கிராமத்தில் மூடநம்பிக்கை காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |