தீ பற்றிய ரயிலை இழுத்து சென்ற பொதுமக்கள்: இணையத்தில் பரவும் வைரல் காட்சிகள்!
இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில் தீ பற்றிய ரயிலின் பகுதியில் இருந்து மற்ற ரயில் பெட்டிகளை பொதுமக்கள் பிரித்து இழுத்துச்செல்லும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.
இந்தியாவின் சஹாரன்பூரில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி செல்லவேண்டிய ரயில், மீரட் பகுதிக்கு அருகில் உள்ள தௌராலா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போது ரயில்வண்டியில் திடீரென தீப்பற்றி ஏறிய தொடங்கியது.
ரயிலின் பயணியர் பெட்டியில் பற்றிய தீயானது விரைவாக என்ஜின் பகுதிக்கு பரவவே, அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் பொதுமக்களின் உதவியுடன் விரைவாக செயல்ப்பட்டு தீப்பற்றிய ரயிலின் பகுதிகளை பிரித்து தீ மற்ற ரயில் பெட்டிகளுக்கும் பரவாதவண்ணம் இழுத்து சென்றுள்ளனர்.
Only in UP- after fire broke out in a train compartment, locals helped push the train in Meerut's Daurala. pic.twitter.com/fBSexNjzCe
— Amil Bhatnagar (@AmilwithanL) March 5, 2022
இதனால் இந்த தீ விபத்தில் பொதுமக்கள் யாரும் காயமின்றி தப்பித்துடன், நடைபெறவிருந்த மிகப்பெரிய பாதிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுஎன ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ரயிலில் தீ பற்றியவுடன் பொதுமக்கள் அனைவரும் பீதியில் அந்த பகுதியில் இருந்து விரைவாக விலகி செல்லும் நிலையில், உத்தரப்பிரேதச மக்கள் தைரியமாக ரயிலின் பிறபகுதிகளில் தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கி ரயில் பெட்டிகளை தள்ளிச்சென்றிருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தநிலையில்,பொதுமக்கள் ரயிலை கூட்டாக சேர்ந்து வெறும் கையில் இழுத்து செல்லும் வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவி தற்போது வைரல் ஆகி வருகிறது.