49 நாட்களுக்கு பிறகு பகல்வெட்டத்தைக் காணும் 42,000 மக்கள்... வெளியான காரணம்
நோர்வே நகரமொன்றில் வசிக்கும் மக்கள் 49 நாட்களில் முதல் முறையாக பகல் வெளிச்சத்தை அனுபவித்துள்ளனர்.
பகல் வெளிச்சம்
நோர்வே நாட்டில் அமைந்துள்ள Tromsø நகரமானது ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே 200 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் குளிர்காலம் மற்றும் கோடை இரண்டிலும் தீவிர வெளிச்ச மாறுபாடுகளை இப்பகுதி அனுபவிக்கிறது.
குளிர்காலத்தில், நகரம் மொத்தம் போலார் இரவை அனுபவிக்கிறது. அதாவது நவம்பர் மாத இறுதிக்கும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதிக்கும் இடையில் நகரத்தின் 42,000 குடியிருப்பாளர்கள் பகல் வெளிச்சத்தைப் பார்ப்பதில்லை.
நவம்பர் 26ம் திகதிக்கு பின்னர் 49 நாட்கள் தொடர்ச்சியான இரவுகளை அடுத்து Tromsø மக்கள் முதல் முறையாக பகல் வெளிச்சத்தை அனுபவித்துள்ளனர். துருவ இரவு மற்றொரு வருடத்திற்கு முடிவடையும் நிலையில், Tromsø மக்கள் மொத்தம் 54 நிமிடங்கள் பகல் வெளிச்சத்தை அனுபவித்துள்ளனர்.
சுமார் 4 மாதங்கள்
ஆனால், மே மாதம் தொடங்கி ஜூலை வரையில் இங்கு சூரிய அஸ்தமனம் இல்லை என்பதும் இன்னொரு விசித்திரம். நள்ளிரவு சூரியன் என்ற நிகழ்வுக்கு அடுத்து, பகல் நேரம் குறைந்து, நவம்பரில் மீண்டும் துருவ இரவுகள் தொடங்கும்.
துருவ இரவுகளின் போது வானம் பெரும்பாலும் இருள் சூழ்ந்து காணப்படும். நண்பகல் நேரம் வானம் ஊதா மற்றும் நீல நிற ஒளிர்வுடன் காணப்படும். குளிர்கால மாதங்களில் உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நகரத்தில் அரோராவைப் பார்க்கும் வாய்ப்பு அமையும்.
துருவ இரவுகளை எதிர்கொள்ளும் இன்னொரு பகுதியும் நோர்வேயில் அமைந்துள்ளது. நோர்வேயின் பிரதான நிலப்பகுதிக்கும் வட துருவத்திற்கும் இடையிலான ஒரு தீவுக்கூட்டமாகும் Svalbard. இங்கே ஆண்டுக்கு சுமார் 4 மாதங்கள் வானம் இருண்டு காணப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |