பிரான்சில் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றிலிருந்து வந்த பில்லை கண்டு அதிர்ந்த மக்கள்: பின்னர் தெரியவந்த உண்மை
நேற்று முன்தினம், பிரான்சில் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றிலிருந்து பலருக்கு பெரும் தொகைக்கான பில் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒருவருக்கு, ஒரு பீட்சா 466 யூரோக்கள் விலையில் 38 பீட்சாக்களுக்கான பில் வரவே ஷாக்காகிவிட்டார்.
மற்றொருவர், பதறிப்போய் தன் வங்கியை அழைத்து, தான் ஆர்டர் செய்யாத பொருட்களுக்கு பில் வந்துள்ளதாகவும், உடனே அந்த கணக்கை பிளாக் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இப்படியே நிறையபேர் குழம்பிக்கொண்டிருக்க, உணவு டெலிவரி நிறுவனமான Deliveroo என்ற நிறுவனத்திலிருந்து அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அந்த செய்தியில், அன்று ஏப்ரல் 1ஆம் திகதி என்பதால். மக்களை முட்டாளாக்குவதற்காக தாங்கள் அப்படி செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.
அந்த செய்தியைக் கண்டு பலர் ஆறுதலடைந்தாலும், சிலருக்கு இன்னமும் கோபம் தீரவில்லை.
தனக்கு மாரடைப்பே வந்துவிட்டது போல் உணர்ந்ததாக கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.