கள்ளக்குறிச்சி கலவரத்தில் காணாமல் போன பொருட்கள்! சாலையில் வீசி சென்ற மக்கள்
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நடத்த கலவரத்தின் போது, பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மக்கள் சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், கொதித்தெழுந்த மக்கள் பள்ளியை சூறையாடினர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பள்ளியின் பேருந்துகள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாகின. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றனர்.
newindianexpress
இந்த நிலையில் அந்த பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை மக்கள் சாலையோரம் வீசி சென்றனர்.
கனியாமூர் பகுதியில் மேசைகள், நாற்காலிகள், சிலிண்டர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் குவிந்து கிடக்கின்றன.