நிதிஷ் குமார் பிரதமராக வேண்டும்..! பரபரப்பை கிளப்பியுள்ள இந்திய தேர்தல் முடிவுகள்
நிதிஷ் குமார் பிரதமராக வேண்டும் என்று ஜேடியூ கட்சி நிர்வாகி எம்.எல்.சி காலித் அன்வர் தெரிவித்து இருப்பது பா.ஜ.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல்
உலகமே எதிர்பார்த்து வந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகள் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலையில் இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களிலும், I.N.D.I.A கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக-விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பீகாரின் நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி வென்ற 15 இடங்கள் மற்றும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்ற 14 இடங்களையும் நம்பியே பாஜக ஆட்சியை தக்கவைக்க முயற்சித்து வருகிறது.
நிதிஷ் குமார் பிரதமராக வேண்டும்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேடியூ கட்சி எம்.எல்.சி காலித் அன்வர், "நிதிஷ்குமார் மட்டும் தான் நாட்டு மக்களையும், சமூகத்தையும் புரிந்து கொள்ளும் அனுபவம் மிக்க தலைவர்” நிதிஷ் குமாரை தவிர சிறந்த பிரதமர் யாராக இருக்க முடியும்?, அவர் ஜனநாயகத்தை மிகவும் மதிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு NDA உள்ளோம். மக்கள் நிதிஷ் குமார் பிரதமராக வேண்டும் விரும்புகிறார்கள். இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் கட்சி பிரமுகரின் இந்த பேச்சு இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |