10 வினாடிகள் ஒற்றைக் காலில் நிற்க முடியவில்லையா.., மரண எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு
ஒற்றைக் காலில் பத்து வினாடிகள் கூட நிற்கத் தவறினால் மரண அபாயம் அதிகரிக்கும் என புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குறைந்தபட்சம் 10 வினாடிகள் ஒற்றைக் காலில் நிற்க முடியாத நடுத்தர வயதுடையவர்கள் ஒரு தசாப்தத்திற்குள் இறக்கும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.
ஒரு எளிய சமநிலை சோதனையில், எந்த ஆதரவும் இல்லாமல் நிற்கக்கூடியவர்களை விட, நிர்க்கமுடியாமல் போராடிய தன்னார்வலர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இறப்பதற்கான வாய்ப்பு 84 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2009-ஆம் ஆண்டு தொடங்கி பிரேசிலில் 50 வயதுக்கு மேற்பட்ட 1,702 பேரின் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஆய்வில் இருந்து முடிவுகள் வந்துள்ளன.
பங்கேற்பாளர்கள் தங்கள் ஒரு காலை ஒரு அடிக்கு உயர்த்தி - தரையில் படாமல்- மற்றோரு காலுக்குப் பின்னால் வைத்து, கைகளை பக்கவாட்டில் வைத்துக்கொண்டு முன்னோக்கிப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்கள் மூன்று முயற்சிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சோதனையில், ஐந்தில் ஒருவர் தேர்வில் தோல்வியடைந்தனர். பொதுவாக அவர்கள் வயதானவர்கள் அல்லது மோசமான உடல்நிலை உள்ளவர்களாக இருந்தனர்.
பிரேசில், பின்லாந்து, அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வயதானவர்களுக்கு வழக்கமான உடல் பரிசோதனையில் சமநிலை கூறுகளைச் சேர்ப்பது மருத்துவர்களுக்கு முக்கியமான சுகாதார தகவல்களை வழங்க முடியும்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 680,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறக்கின்றனர். இந்த 10 வினாடி சோதனை எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை அடையாளம் காண உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.