கைகால் துண்டாக்கப்பட்ட மக்களைப் பார்த்தேன்: நாட்டை உலுக்கிய பெரும் விபத்தில் இருந்து தப்பியவர் உருக்கம்
கைகால்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்ததாக, நடுங்கவைத்த ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தெரிவித்துள்ளார்.
இதுவரை 207 பேர்கள் மரணம்
குறித்த ரயில் விபத்தில் இதுவரை 207 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில் தடம் புரண்டதும் திடுக்கிட்டு கண்விழித்த தம் மீது 10-15 பேர்கள் விழுந்ததாகவும், இதில் கழுத்து மற்றும் கையில் காயம்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
@ani
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது பயணிகள் ரயில் ஒன்று மோதியது. இந்த சூழலில் மூன்றாவது ஒரு பயணிகள் ரயிலும் இந்த விபத்தின் நடுவே மோதியுள்ளது.
பலர் இந்த மூன்று ரயில் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. ஒருவழியாக ரயிலில் இருந்து வெளியேறியபோது, அந்த பகுதிகளில் கைகால்கள் துண்டாக்கப்பட்ட நிலையில் சிதறிக்கிடந்தது எனவும், முகம் மொத்தமாக சிதைந்த ஒருவரையும் தாம் பார்த்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
@reuters
உள்ளூர் நேரப்படி சுமார் 7.20 மணியளவில் குறித்த ரயில் விபத்து நடந்துள்ளது. தகவல் வெளியானதும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள், விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.