மியான்மரில் வலுக்கும் மக்கள் புரட்சி: அரசாங்க வலைத்தளங்களை ஹேக் செய்த போராட்டக் குழு!
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு குழு முக்கிய அரசாங்க வலைதளங்கங்களை ஹேக் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தேர்தல் முறைகேடு தொடர்பாக மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த மியான்மர் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.
அதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பல வெவ்வேறு விதமான போராட்டங்கலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ ஆட்சியை இடைவிடாமல் எதிர்த்து, தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க முயன்று வருகின்றனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சுமார் 495 பொதுமக்கள் ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 460 பேர் காவலில் உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக 'மியான்மர் ஹேக்கர்ஸ்' எனும் குழு இராணுவ ஆட்சிக்கு எதிரான போரத்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய வங்கி, இராணுவத்தால் நடத்தப்படும் பிரச்சார நிறுவனமான True News Information Team மற்றும் பிற முக்கிய அரசாங்க வலைத்தளங்களை ஹேக் செய்துள்ளனர். மேலும் மியான்மர் கடற்படையின் தளத்தையும் ஹேக் செய்ய முயற்சித்துள்ளனர்.
இந்த ஹேக்கிங் குழு அதன் பேஸ்புக் பக்கத்தில் "நாங்கள் மியான்மரில் நீதிக்காக போராடுகிறோம்" என்று எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மியான்மரில் மீண்டும் இணையதள சேவையை இராணுவம் முடக்கியுள்ளது.