ஜப்பானில் 30 கொரிய பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! நடந்தது என்ன?
ஜப்பானில் தற்செயலாக பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டதால் 30 மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெப்பர் ஸ்பிரே
டோக்கியோ நகரில் கொரிய பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நேற்றைய தினம் பாடசாலை வகுப்பறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டுள்ளது.
கண்வலி அறிகுறிகள்
இதனால் கடும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் கண் வலியால் அலறியுள்ளனர். உடனே பாடசாலைக்கு ஒரு டஜன் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொலிஸ் கார்கள் அனுப்பப்பட்டன.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாங்கிய ரஷ்ய போர்க்கப்பல்கள்! அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
பின்னர் மாணவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு கண்வலி அறிகுறிகள் சிறியதாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பொலிசாரின் கூற்றுப்படி, ஒரு ஜூனியர் உயர்நிலைப் பாடசாலை மாணவர் தற்செயலாக, ஒரு இடைவேளையின்போது நண்பருக்கு சொந்தமான பெப்பர் ஸ்பிரேயைப் பயன்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |