பிள்ளைகளுக்கு DNA பரிசோதனை செய்துகொண்டநபர்: சிக்கலில் 18 வருட திருமண வாழ்க்கை
தன் பிள்ளைகளுக்கு DNA பரிசோதனை செய்த ஒருவர், அவர்கள் தன்னுடைய பிள்ளைகளே இல்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரது திருமண வாழ்வு சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
ஆருயிர் மனைவி, அருமையான துணைவி
அலுவலகத்தில் சந்தித்து காதலில் விழுந்த அந்த ஜோடி, தங்களுக்கென ஒரு சொந்தத் தொழில் செய்வதென முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சொந்தத் தொழில் ஒன்று தொடங்கி ஓராண்டுக்குப்பின் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
Image: Getty Images
ஆனால், திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் தங்கள் தொழில் தொடர்பாக இருவருக்கும் ஒரு பெரிய சண்டை நடந்துள்ளது. கோபத்தில் வீட்டை வெளியேறியிருக்கிறார் அந்தக் கணவர்.
இரண்டு வாரங்களுக்குப் பின் கணவரைத் தேடி வந்திருக்கிறார் அந்தப் பெண். அப்போது அவர் இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமப்பதும் தெரியவரவே, மீண்டும் இருவரும் சேர்ந்து வாழத்துவங்கியுள்ளனர்.
Image: Getty Images/iStockphoto
DNA பரிசோதனையில் தெரியவந்த அதிரவைக்கும் தகவல்
இந்நிலையில், சமீபத்தில் தங்கள் முன்னோர்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் DNA பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார் அந்தக் கணவர்.18 ஆண்டுகளாக வாழ்வில் ஆருயிர் மனைவியும், தொழிலில் அருமையான துணைவியுமாக இருந்திருக்கிறார் அந்தப் பெண்.
ஆனால், DNA பரிசோதனையின் முடிவுகள் அதிரவைக்கும் ஒரு தகவலைத் தெரிவித்தன. ஆம், அந்த இரட்டைக் குழந்தைகள் அவருக்குப் பிறந்தவை அல்ல.
(Image: Getty Images)
18 ஆண்டுகால திருமண வாழ்வுக்குப் பிறகு இப்படி ஒரு விடயம் தெரியவந்ததால், அதிர்ந்துபோன அவர் தன் மனைவியிடம் இது குறித்துக் கேட்க, திருமணமான புதிதில் அவர் கோபித்துக்கொண்டு சென்றபோது, தான் குடிபோதையில் வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார் அவருடைய மனைவி.
ஆனால், அவருடன் மீண்டும் இணைந்தபிறகு தான் அவருக்கு துரோகம் செய்யவில்லை என்று கண்ணீர் விட்டுக் கதறுகிறாராம் அந்தப் பெண். பிள்ளைகள் மீது அதீத பாசம் கொண்ட அந்த நபர், பிள்ளைகளையும் பிரியமுடியாமல், மனைவியின் துரோகத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவித்து வருகிறார்.