Personal Loan கிரெடிட் ஆன சில நிமிடங்களில் டெபிட் ஆன ரூ.1 லட்சம்: வங்கியில் கேட்டால் மாற்று பதில்
தமிழக மாவட்டம் கோவையைச் சேர்ந்த நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆன பர்சனல் லோனின் தொகையில் ஒரு லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
பர்சனல் லோன்
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியை சேர்ந்த அனால் அசார் என்பவர் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனது நண்பரின் தேவைக்காக இண்டஸ் இன்ட் வங்கியில் பர்சனல் லோனாக ரூ.2 லட்சத்து 12,000 நேற்று மாலை எடுத்துள்ளார்.
இவருக்கு இந்த தொகையானது வங்கிக்கணக்கில் கிரெடிட் செய்யப்பட்ட சில நிமிடங்களில் ரூ.95 ஆயிரத்து 5,000 என இரண்டு முறை டெபிட் செய்யப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அசார் ஒன்லைன் மூலமாக வங்கிக்கணக்கை முடக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
லோன் கொடுக்கவில்லை
பின்னர், வங்கிக்கு சென்று கேட்டபோது, எங்களுடைய வங்கியில் யாரையும் பர்சனல் லோன் கொடுக்கவில்லை எனவும், சென்னையில் உள்ள நபர் தான் லோன் கொடுத்துள்ளார் எனவும் வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளதாகவும், அவர்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறியுள்ளனர்.
போராட்டம்
வங்கியில் கூறிய பதிலில் உடன்பாடு இல்லாத அசார் வீதியில் அமர்ந்து போராட ஆரம்பித்தார். இது குறித்து அவர் பேசுகையில், "வங்கியில் பணியாற்றும் நபர்தான் எனக்கு லோன் வங்கிக் கொடுத்துள்ளார். இங்கு வந்து கேட்டால் சென்னையில் உள்ள நபர் தான் கொடுத்துள்ளார் என கூறுகின்றனர்.
என்னுடைய வங்கிக்கணக்கில் ஓ.டி.பி வராமல் எப்படி பணம் டெபிட் ஆக முடியும். வங்கியில் உள்ளவர்கள் தான் இதற்கு காரணம். இந்த பணம் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை தான் செய்துகொள்ள வேண்டும்" என்றார்
பின்பு, வங்கியில் உள்ள அதிகாரிகள் இவரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் எச்டிஎப்சி வங்கிக்கணக்கு கொண்ட நபருக்கு மாறி சென்றுள்ளது. விரைவில் இந்த பணத்தை திரும்பி தருகிறோம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |