அவள் என் காதலி! 800 வருட பழமையான மம்மியோடு பொலிஸிடம் சிக்கிய நபர்
பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார்.
800 வருடப் பழமையான மம்மி
பெரு நாட்டை சேர்ந்த 26 வயது நிரம்பிய ஜூலியோ சீசர் பெர்மேஜோ என்பவர், வாகனத்தில் பெட்ரோல் அடிக்க நிறுத்தும் போது, காவல்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
உடனடியாக அவர் வைத்திருந்த பையை திறந்து பார்க்கும் போது, அதில் மம்மி உடல் இருந்ததைக் காவல் துறை கண்டறிந்துள்ளனர்.
@afp
பின் அவரை விசாரிக்கையில் இந்த மம்மியை அவரது அப்பா 30 வருடங்களுக்கு முன்னால் வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்ததாக கூறியுள்ளார்.
ஆன்மீக காதலி
சீசர் பெர்மேஜோ அந்த மம்மியை "தனது ஆன்மீக காதலி" என்றும் கூறியுள்ளார். மேலும் நான் அவளோடு உரையாடுவேன் என்றவர், தனது நண்பர்களுக்குக் காட்டுவதற்காக மம்மியை எடுத்துச் சென்றேன் என்கிறார்.
இதனை அடுத்து அவரிடமிருந்த மம்மி பொம்மை பறிமுதல் செய்யப்பட்டு, தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பட்டுள்ளது.
மம்மியை ஆராய்ச்சி செய்த கலாச்சார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய நினைவுச்சின்னம் லிமாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 1,300 கிலோமீட்டர்கள் (800 மைல்கள்) தொலைவில் உள்ள பெருவியன் ஆண்டிஸில் உள்ள ஒரு பகுதியான புனோவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மம்மியாக செய்யப்பட்ட இறந்த ஆண் நபரின் உடலாகும்.
@afp
“இது ஜீவானிடா அல்ல, இது ஒரு ஜீவான்” என்று அமைச்சகத்தின் நிபுணர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த மம்மி குறைந்தது 45 வயதுடைய மனிதனுடையதாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
சட்டப்படி மம்மி பண்டைய கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகப் பெரு அரசு கூறியுள்ளது.