உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயு சாத்தியமற்றது - ரஷ்யாவின் டிமித்ரி பெஸ்கோவ்
Peskov says gas shipment impossible right now: எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தொடங்குவதற்கான வாய்ப்பு குறைவு என டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவது என்பது வாங்குபவர்களின் விருப்பம் என பெஸ்கோவ் கூறியுள்ளார்.
உக்ரேனிய குழாய்கள்
வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ட்ரம்ப் நிர்வாகம் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு ரஷ்யாவை ஊக்குவிக்கும் விதமாக, செப்டம்பர் மாத பேச்சுவார்தைகளின்போது முன்மொழிந்ததாக செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து ரஷ்யா தற்போது கருத்து தெரிவித்துள்ளது. உக்ரேனிய குழாய்கள் வழியாக ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கிறது.
ரஷ்ய எரிவாயு ஒரு அமெரிக்க இடைத்தரகர் மூலம் விற்கப்படும். அதன்மூலம் கிடைக்கும் வருமானம், ரஷ்யா தனது போர் முயற்சிகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக ஒரு வெளிநாட்டுப் பாதுகாப்பு கணக்கில் வைக்கப்படும்.
டிமித்ரி பெஸ்கோவ்
செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டு பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், "வெளிப்படையாக சொல்வதானால், அத்தகைய திட்டங்களை இப்போதைக்கு செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பதை கள நிலவரம் மிக தெளிவாக உணர்த்துகிறது.

ஆனால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். உக்ரைன் வழியாக எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவது என்பது வாங்குபவர்களின் விருப்பம், விற்பனையாளர்களின் விருப்பம் மற்றும் விற்பனையாளர்களின் திறன் ஆகியவற்றைப் பொறுத்தது" என்றார்.
உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்கு பிறகு, ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு குழாய்வழி விநியோகம் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அனைத்து இறக்குமதிகளையும் முடிவுக்குக் கொண்டுவர பிரஸ்ஸல்ஸ் உறுதியளித்துள்ளது.
