துபாயை விட்டு புலம்பெயரும் வெளிநாட்டினர்: அதிகரிக்கும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை
துபாயில் வெளிநாட்டினர் அப்பகுதியை விட்டு வெளியேற போராடுவதால், கைவிடப்படும் செல்லப் பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வெளியேறி வரும் மக்கள்
மத்திய கிழக்கில் ஏவுகணை தாக்குதல் மற்றும் அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து, அங்கு சில பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக துபாயில் இருந்து வெளியேறும் பலர் செல்லப்பிராணிகளை அங்கேயே கைவிட்டுவிடுகின்றனர்.
அப்பகுதியை விட்டு வெளியேற பலர் போராடுவதால், நாய்கள் மற்றும் பூனைகளின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரிப்பதைக் காண்பதாக விலங்கு மீட்பு அமைப்புகள் கூறுகின்றன.
எனினும், இவ்வாறு கைவிடப்பட்ட விலங்குகளின் திடீர் அதிகரிப்பை சமாளிக்க தங்குமிடங்கள் மாற்று மீட்பு அமைப்புகள் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் துபாயில் உள்ள கால்நடை மருத்துவர்கள், செல்லப்பிராணிகளை கருணைக்கொலை செய்வது குறித்த விசாரணைகளில் அசாதாரண அதிகரிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |