பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 72-ஆக உயர்வு
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு மாகாணத்தில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.
Bogo நகரில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த ஹோட்டல் கட்டிடத்தில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேரழிவு மேலாண்மை மன்றத்தின் பேச்சாளர் ஜூனி காஸ்டிலோ, "இப்போது காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை, எல்லோரும் கணக்கில் உள்ளனர்" என கூறியுள்ளார்.
இந்த பேரழிவில் 294 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 20,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
செபு மாகாணத்தின் வடக்கு பகுதியில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து ஏற்படும் பிண்டகிய அதிர்வுகள், மக்கள் வீடுகளுக்கு திரும்ப தயங்க காரணமாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |