ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததை ஒப்புக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட், ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சட்டவிரோத போதைப்பொருள்
தெற்காசிய நாடான பிலிப்பைன்சில் சட்டவிரோத போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதனால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் (Rodrigo Duterte) மணிலா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் துப்பாக்கியால் பலரை சுட்டுக்கொன்றதாகவும் புகார் கூறப்பட்ட நிலையில், நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீதிமன்றத்தில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
ரோட்ரிகோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று கோஷங்களை எழுப்பினர்.
அனைத்துப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்
பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்பதாக ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவர் நாட்டு மக்களுக்கு பேசும் வீடியோவை அவரது ஆலோசகர் பகிர்ந்துள்ளார்.
அதில், "நான் தான் நம் சட்டம் மற்றும் ராணுவத்தை வழிநடத்தினேன். உங்களை பாதுகாப்பேன் என்று கூறினேன். இதற்கான அனைத்துப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்" என கூறியிருக்கிறார்.
ரோட்ரிகோ டியுடெர்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |