கடைசியாக கிரெடிட் கார்டில் இருந்த 35 திர்ஹானால் லட்சாதிபதியாக மாறிய நபர்! அள்ளிக் கொடுத்த அதிர்ஷ்டம்
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய கிரெடிட் கார்டில் கடைசியாக இருந்த வெறும் 35 திர்ஹானை வைத்து இன்று லட்சதிபதியாக மாறியுள்ளார்.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த Dennis(34) துபாயில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கிரெடிட் கார்டில் கடைசியாக இருந்த 35 திர்ஹானை வைத்து, Mahzooz ticket-ல் குலுக்கல் லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.
இதையடுத்து இந்த வார இறுதியில் நடைபெற்ற அந்த குலுக்களில் அவர் 142,857(இலங்கை மதிப்பில் 77,99,330 ரூபாய்) திர்ஹானை வென்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய கிரெடிட் கார்டில் கடைசியாக வைத்திருந்த 35 திர்ஹானை வைத்து, டிக்கெட் வாங்க முடிவு செய்தேன்.
முதலில் நான் கடந்த 27-ஆம் திகதி நடைபெற்ற குலுக்கல் டிக்கெட்டை வாங்க விரும்பினேன்.
ஆனால் அது இணையத்தில் தாமதமானதால், அது ஏப்ரல் 3-ஆம் திகதி குலுக்கலுக்கு சென்றது.
அது இப்போது எனக்கு அதிர்ஷ்டமாக மாறிவிட்டது. கடந்த சில மாதங்களாக நான் நிறைய கஷ்டங்களை சந்தித்து வருகிறேன். நான் இது வென்ற பின், என வங்கிக் கணக்கை பார்த்த போது, எனக்கு ஆனந்த கண்ணீர் தான் வந்தது.
கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். கடந்த ஜனவரியில் நான் என் வேலையை விட்டுவிட்டேன், இன்னும் புதிதாக வேலை கிடைக்கவில்லை.
இப்போது எனக்கு அந்த கஷ்டம் தேவையில்லை, இந்த நேரத்தில் எனக்கு இந்த பணம் தேவையான ஒன்று. நான் இந்த பணத்தை பிலிப்பைன்ஸில் உள்ள எங்கள் வீட்டின் கடனை அடைக்க உதவும்.
இதன் மூலம் நான் என் குடும்பத்தார் மற்றும் மகளுடன் நேரத்தை செலவிட உதவும் Mahzooz ticket-க்கு நன்றி என உருக்கமாக கூறியுள்ளார்.
