அரசு ஊழியர்கள் சிரித்தபடி சேவை செய்யவேண்டும், இல்லையெனில்.., பிரபல நாட்டில் அதிரடி உத்தரவு
பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மேயர், உள்ளூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவையின் மதிப்பை மேம்படுத்தும் முயற்சியாக, அரசு ஊழியர்களை புன்னகையித்தபடி சேவை செய்யவேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸின் லூசான் தீவில் உள்ள க்யூசான் மாகாணத்தில் உள்ள முலனாய் நகரத்தின் மேயர் Aristotle Aguirre இவ்வாறு உத்தவிட்டுள்ளார்.
தென்னை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உட்பட உள்ளூர் மக்கள் தங்கள் வரியைச் செலுத்தவோ அல்லது ஒரு பிரச்சினைக்கு உதவி பெறவோ சென்றபோது டவுன்ஹால் ஊழியர்களிடம் இருந்து அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து புகார் எழுந்ததையடுத்து இந்த புதிய கொள்கையை அவர் கொண்டு வந்ததாக மேயர் கூறினார்.
"பூமியில் இருப்பதே இனப்பெருக்கம் செய்யத்தான்" வளர்ப்பு மகளுடன் 2-வது குழந்தை பெற்ற எலான் மஸ்க் தந்தை!
மக்கள் வரும்போது, அவர்கள் பரிவர்த்தனை செய்யும் நபர்களின் அணுகுமுறையால் அவர்கள் திகைத்து நிற்பதாக கூறிய மேயர் அகுய்ரே, அவர் ஒரு தொழில்சார் சிகிச்சையில் (occupational therapy) பின்னணி கொண்டவர் என்பதால், அரசாங்க ஊழியர்களின் அணுகுமுறையை மாற்ற விரும்பினார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முதல் மனைவி விபத்தில் மரணம்
இதனால், மக்களுக்குச் சேவை செய்யும் போது புன்னகைக் கொள்கையைக் கடைப்பிடித்து, அமைதி மற்றும் நட்பு சூழ்நிலையை வெளிப்படுத்துவதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் சேவையின் நேர்மையை வெளிப்படுத்துமாறு அவர் உத்தவிட்டார்.
உத்தரவுக்கு இணங்காத ஊழியர்களுக்கு ஆறு மாத சம்பளத்திற்கு சமமான அபராதம் அல்லது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.