முழு தீவையும் ஆட்சி செய்யும் ஏஐ - எங்கே தெரியுமா?

Philippines Artificial Intelligence
By Karthikraja May 20, 2026 12:43 PM GMT
Report

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.

பல்வேறு துறைகளில் அதன் ஆதிக்கம் உள்ள நிலையில், சில நாடுகளில் AI மாதிரிகளை நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சர்களாகவும் நியமித்தனர்.

இந்நிலையில், ஒரு தீவு முழுவதையும் AI ஆட்சி செய்ய உள்ளது.

AI ஆட்சி செய்யும் தீவு

பிலிப்பைன்ஸின் மேற்கு பலவான் மாகாணம் ஃபிளவன் தீவுகளுக்கு அருகிலுள்ள 3.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு சிறிய பகுதியை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆட்சி செய்யபட உள்ளது. 

முழு தீவையும் ஆட்சி செய்யும் ஏஐ - எங்கே தெரியுமா? | Philippines Sensai Island To Govern By Ai

Sensay என்ற Ai நிறுவனத்தின் நிறுவனரான Dan Thomson என்பவர், அந்த பகுதிக்கு தனது நிறுவனத்தின் பெயராக சென்சாய் தீவு என பெயரிட்டுள்ளார். 

முழு தீவையும் ஆட்சி செய்யும் ஏஐ - எங்கே தெரியுமா? | Philippines Sensai Island To Govern By Ai

இதை ஒரு சிறிய, சுதந்திரமான பிராந்தியமான "மைக்ரோநேஷனாக" உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இங்கு, மனிதர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல் அமைச்சரவை நியமிக்கப்படும்.

இந்த செயற்கை நுண்ணறிவு அமைச்சரவையில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில் நிக்கோலா டெஸ்லா, சன் சூ, புளோரென்ஸ் நைட்டிங்கேல், கன்பூசியஸ் போன்ற வரலாற்றுத் தலைவர்களின் எண்ணங்கள் மற்றும் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் அவதாரங்கள் இடம்பெறுகிறது. 

365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண்

365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண்

ஒரு பிரச்சினை இந்த அமைச்சரவை முன்வைக்கப்படும் போது, ஓவ்வொரு ஏஐ அவதாரமும் தங்களின் துறைசார் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கண்ணோட்டத்தை வழங்கி, ஒருமித்த கருத்து நெறிமுறை, உள்ளீடுகளை ஒருங்கிணைத்து ஒரு இறுதி முடிவை உருவாக்குகிறது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அரசாங்கம், ஊழல், சுயநலம், செல்வாக்கு செலுத்துதல் மற்றும் அரசியல் அழுத்தம் போன்ற மனித அரசியலின் பல சிக்கல்களைத் தணிக்க முடியும் என நம்புகின்றனர்.

இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு உணர்ச்சி அல்லது அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் அல்லாமல், தரவுகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முயற்சிக்கும்.

எதிர்காலத்தில் பல நாடுகள் நிர்வாக உதவிக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கும் என இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்புகிறார்கள்.

12,000 மின்னணுக் குடிமக்கள்

ஆனால் இது ஆபத்தானது என செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

"ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்பது வெறும் தரவுகள் மற்றும் அல்காரிதம்களை மட்டும் சார்ந்ததல்ல. அதற்கு மனித அனுதாபமும் சமூகப் புரிதலும் தேவை. செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பிழை அல்லது சார்புத்தன்மைக்கு ஆளாகக்கூடியவை.

முழு அரசாங்கமும் ஒரு தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அது ஜனநாயகத்திற்கு ஒரு சவாலாக அமையக்கூடும்" என செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

முழு தீவையும் ஆட்சி செய்யும் ஏஐ - எங்கே தெரியுமா? | Philippines Sensai Island To Govern By Ai

இதுவரை, இந்த தீவில் சுமார் 12,000 பேர் 'மின்னணுக் குடிமக்களாக' மாறத் தயாராக உள்ளனர்.

விரைவில் பார்வையாளர் விசாக்கள் வழங்கப்பட தொடங்கும், அதனைத் தொடர்ந்து படிப்படியாக ஆராய்ச்சிப் பணிகளுக்கான தங்குமிடங்களும் நிரந்தரக் குடியுரிமையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவுக்கான அடிப்படை சாசனம் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் படிவமும் உள்ளது.

பாரம்பரிய அரசியல் மற்றும் ஊழலால் சலிப்படைந்த பொதுமக்கள், ஒரு புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்பை நம்பிக்கையுடனும், எதிர்காலத்தின் ஒரு முன்னோட்டமாகவும் பார்க்கிறார்கள்.

இந்த முயற்சி எதிர்காலத்தில் AI அரசாங்கத்தை நடத்த முடியுமா, மனிதரைகளை விட சிறப்பான ஆட்சியை நடத்த முடியுமா என்ற விவாதத்தை தூண்டியுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US