சட்டைப் பையில் திடீரென வெடித்து சிதறிய செல்போன்!
கேரளாவில் டீ கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த 76 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
சமீபகாலமாக கேரளாவில் செல்போன் வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 24ம் தேதி செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலியானார், அடுத்ததாக கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
இந்நிலையில் திருச்சூரின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் டீ அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சட்டை பையில் இருந்த செல்போன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அவர் செல்போனை எடுத்து கீழே போட்டதாக, காயமின்றி தப்பினார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.