இரண்டு தலைவர்கள் சந்திப்பை படுத்துக்கொண்டே படம் பிடித்த ஊடகவியலாளர்கள்
உலகத் தலைவர்கள் இரண்டு பேர் சந்திப்பை, ஊடகவியலாளர்கள் படுத்துக்கொண்டே புகைப்படம் எடுத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
படுத்துக்கொண்டே படம் பிடித்த ஊடகவியலாளர்கள்
கடந்த வாரம், இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனி, மொசாம்பிக் நாட்டின் ஜனாதிபதியான டேனியல் சாப்போவுக்கு ரோமில் வரவேற்பளித்தார்.
When Mozambican President Daniel Francisco Chapo met Italian Prime Minister Giorgia Meloni in Rome, journalists, especially photographers, struggled to frame their shots because of the significant height difference.🤣🤣🤣 pic.twitter.com/zCd4sWRl6I
— Hopewell Chin’ono (@daddyhope) December 15, 2025
விடயம் என்னவென்றால், அவர்கள் இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுப்பது ஊடகவியலாளர்களுக்கு சற்று சவாலான வேலையாகிவிட்டது.
ஆம், மெலோனியின் உயரம் 5 அடி 2 அங்குலம், ஆனால், டேனியலின் உயரமோ 6 அடி 8 அங்குலம்.
ஆக, அவர்கள் இருவரையும் ஒரே ஃப்ரேமில் சேர்த்து படம் பிடிப்பது புகைப்படக் கலைஞர்களுக்கு கஷ்டமாகிவிட்டது.
இருவரையும் சேர்த்து, குனிந்து புகைப்படம் எடுக்க சிலர் முயல, சில புகைப்படக் கலைஞர்களோ, தரையில் படுத்துக்கொண்டே புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |