தித்திக்கும் சுவையில் பிடி கொழுக்கட்டை.., இலகுவாக செய்யலாம்
விநாயகர் சதுர்த்தி என்றாலே உடனே நாம் செய்யக்கூடியது விநாயகருக்கு பிடித்த இந்த கொழுக்கட்டை தான்.
கொழுக்கட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் இனிப்பு வகை.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- வெல்லம்- 1 கப்
- நெய்- 1 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
- தேங்காய்- ¼ கப்
செய்முறை
முதலில் பச்சரிசியை 2 முறை நன்கு கழுவி உலர்ந்த துணியில் போட்டு 15 நிமிடம் அரிசியை உலரவைக்கவும்.
உலர்ந்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து சலித்து அரிசி மாவை எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 1கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து கரைந்ததும் வடிகட்டி எடுத்துகொள்ளளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கரைத்த வெல்ல பாகு சேர்த்து கொதித்ததும் அதில் நெய், ஏலக்காய் தூள், உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இதனைத்தொடர்ந்து மிதமான தீயில் வைத்து இதில் சலித்த அரிசி மா சேர்த்து கெட்டியாகி வரும்வரை நன்கு கிளறவும்.
பின் சூடு குறைந்ததும் கையில் நெய் தடவி சிறிய சிறிய உருண்டயாக பிடித்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக பிடித்த மாவை இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான பிடி கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |