காக்பிட்டில் பெண் ஒருவரை அனுமதித்த விமானி: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம்
காக்பிட்டில் பெண் நண்பரை அனுமதித்ததற்காக விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் துபாயிலிருந்து டெல்லி செல்லும்போது பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பெண் நண்பரை விமானி அறையில் தங்க அனுமதித்ததற்காக ஏர் இந்தியா விமானி மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
Image Credit: Supplied
டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், "டிஜிசிஏ விதிமுறைகளை மீறி, பணியில் இருந்த ஏர் இந்தியா ஊழியர் ஒருவரை, பயணத்தின் போது விமானி அறைக்குள் நுழைய அனுமதித்துள்ளார்." இது "பாதுகாப்பு உணர்திறன் மீறல்" என்ற போதிலும், ஏர் இந்தியா இந்த சூழலில் விரைவான சரிசெய்தல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு முக்கிய பிரச்சினையை உடனடியாகவும் திறம்படவும் தீர்க்காததற்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Picture for representational purpose
விமான விதிகள் 1937-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், விதிகளை மீறியதற்காகவும் குறித்த விமானியின் பைலட் உரிமம் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விதிமீறலைத் தடுப்பதில் உறுதியாக இல்லாததால், துணை விமானி எச்சரிக்கப்பட்டுள்ளார் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத நபர்கள் காக்பிட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் அத்தகைய நுழைவு விதிமுறைகளை மீறுவதாகும்.