228 பயணிகளுடன் கடலில் மோதிய விமானம்: காக்பிட்-டில் பதிவான விமானியின் கடைசி மூன்று வார்த்தைகள்
நடுக்கடலில் 228 பேர்களின் உயிர்களை பறித்த ஏர்பஸ் 330 விமானத்தின் பயங்கர விபத்தின் போது, அதன் விமானி கடைசியாக கூறிய மூன்று வார்த்தைகள் தற்போது தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம்
கடந்த 2009ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குப் பறந்த ஏர் பிரான்ஸ் ஏர்பஸ் 330 விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனால் விமானத்தில் பயணித்த 228 பயணிகளும் துரதிஷ்டவசமாக தங்கள் உயிர்களை பறிகொடுத்தனர். இந்த விபத்திற்கு மார்க் டுபோயிஸ்(58), டேவிட் ராபர்ட் (37), மற்றும் பியர்-செட்ரிக் போனின் (32) ஆகிய விமானிகளின் நடத்தை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தை இயக்க வேண்டிய இருவர் ஒருவர் பின் ஒருவராக தூங்கியது தெரியவந்தது.
இதற்கிடையில் விமானத்தின் வீழ்ச்சி குறித்த சட்ட விசாரணை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், இன்று ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் ஆகியவை மனித படுகொலையில் இருந்து விடுவிக்கப்பட்டன.
மேலும் விமான விபத்துக்கு விமானத்தின் விமானிகள் முழு பொறுப்பாளராக கருதப்பட்டுள்ளனர்.
விமானிகள் கூறிய கடைசி மூன்று வார்த்தை
பதிவு செய்யப்பட்ட காக்பிட் உரையாடல்கள், விமானிகள் மூவரின் திகிலூட்டும் இறுதி உரையாடலையும் வெளிப்படுத்தின.
அதில், நாங்கள் விபத்துக்குள்ளாக போகிறோம்! அது உண்மையல்ல! ஆனால் என்ன நடக்கிறது?" என்று விமானி ராபர்ட் பேசுவது கேட்க முடிகிறது.
பின் விமானிகள் ராபர்ட் அல்லது போனின் இருவரில் ஒருவர் யாரோ நாங்கள் இறந்து விட்டோம் என சேர்க்கிறார்.
இதை தொடர்ந்து நான்கு மணி நேரம் 15 நிமிடங்களில் விமானம் அட்லாண்டிக் கடலில் மோதி விபத்துக்குள்ளானது.