65 ஆண்டுகளில் மீண்டும் ஒரு கொள்ளைநோய்: பிரபல ஜோதிட நிபுணர் கணித்துள்ள சில்லிடவைக்கும் விடயங்கள்
பிரபல பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. 9/11 இரட்டைக்கோபுர தாக்குதல்கள் முதல் பிரித்தானிய மகாராணியாரின் மரணம் வரை, பல விடயங்களை அவர் துல்லியமாக கணித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அடுத்த 100 ஆண்டுகளுக்கான கணிப்புகள்
தற்போது, அடுத்த 100 ஆண்டுகளில் நடக்கவிருக்கும் சில முக்கிய விடயங்கள் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
2031ஆம் ஆண்டில், புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ். வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால், பணக்காரர்களுக்கு அந்த மருந்து எளிதாக கிடைக்கும் அதே நேரத்தில், ஏழைகளோ அந்த மருந்து கிடப்பதற்காக போராடவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.
(Image: Getty Images/iStockphoto)
2050ஆம் ஆண்டில் மனித இனம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை உலகம் முழுவதும் வாழும் மக்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்குமாம்.
(Image: Getty Images/Tetra images RF)
2060இல், தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை எட்டியதன் விளைவுகளான இயந்திர மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுடன் அட்ஜஸ்ட் செய்து வாழும் நிலை உருவாகுமாம்.
(Image: Getty Images)
2074இல், மனித இனம் முதன்முறையாக செவ்வாய்க்கிரகத்தில் வாழ்த்துவங்குமாம். பூமியில் இயந்திர மனிதர்களுக்குத் தப்பியோடும் மனித இனம் அப்படி செவ்வாய்க்கிரகத்தில் தஞ்சம் புகுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
(Image: Getty Images/iStockphoto)
2085இல், மீண்டும் கொரோனா போன்றதொரு கொள்ளை நோயை பூமி எதிர்கொள்ளவேண்டிவரும் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளாராம். அதுசரி, 2074இல்தான் மனிதர்கள் செவ்வாய்க்கிரகத்துக்கு தப்பியோடிவிடுவார்களே!
(Image: AFP via Getty Images)
நல்லவேளையாக, 2099இல் பூமிக்கு அமைதி திரும்பும் என கணித்துள்ளாராம் நாஸ்ட்ரடாமஸ்.
(Image: Getty Images)