பிரேசிலில் சுற்றுலா தளத்தின் மீது விழுந்த விமானம்: விமானி உட்பட 10 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் பயணிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
ஞாயிற்றுக்கிழமை, தெற்கு பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிராமாட்டோவில்(Gramado) ஒரு பயங்கரமான விமான விபத்து ஏற்பட்டது, இதில் விமானத்தில் இருந்த அனைத்து 10 பேரும் உயிரிழந்தனர்.
இரட்டை என்ஜின் கொண்ட பைப்பர் பிஏ-42-1000 விமானம்(twin-engine Piper PA-42-1000), குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் தரையில் இருந்த 17 பேர் மேலும் காயமடைந்தனர்.
விமான உரிமையாளரும் விமானியுமான லூயிஸ் கிளாடியோ கலீசியா(Luiz Claudio Galeazzi) மற்றும் அவரது குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் பயணம் செய்த விமானம், கடினமான வானிலை நிலைமைகளின் கீழ் கனேலா(Canela) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
சாவோ பவுலோ மாநிலத்தின் ஜுண்டியாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த மோசமான சம்பவம் நடந்தது.
ஆளுநர் Eduardo Leite உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார் மற்றும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |