இந்தியாவிலிருந்து ரஷ்யா நோக்கி சென்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: பயணிகள் நிலைமை என்ன?
இந்தியாவிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ரஷ்யா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் மலைகளில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்கள் நிலைமை என்ன?
விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த ஆறு பேரில், நான்கு பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்கள். மற்ற இருவரும் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடந்தது என்னவென்றால், ரஷ்ய கோடீஸ்வரர்களான Anatoly Evsyukov என்பவரும், அவரது மனைவியான Annaவும், விடுமுறைக்காக தாய்லாந்து சென்றிருந்த நிலையில், அவரது மனைவி கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், இந்தியாவில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, சிகிச்சைக்காக ரஷ்யா நோக்கி சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவருமே விபத்தில் உயிரிழந்துவிட்டார்கள்.
உயிர் பிழைத்தவர்களில் Pavel Popov மற்றும் Igor Syvorotkin (26) என்னும் இருவர் மருத்துவ உதவிக்குழுவினர். ஆனால், Dmitry Belyakov மற்றும் Arkady Grachev என்னும் இருவரும்தான் விமானத்தில் பிரச்சினை என்று தெரியவந்ததும், லாவகமாக பனி நிறைந்த மலையில் அந்த விமானத்தை கொண்டு இறக்கியிருக்கிறார்கள். அவர்களால்தான் நான்கு உயிர்கள் தப்பியுள்ளன.
ரஷ்ய அதிகாரிகள் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக விசாரணை துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |