பிரேசில் சாலையில் பேருந்தின் மீது பாய்ந்த விமானம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்
பிரேசிலில் சிறிய ரக விமானம் ஒன்று பரபரப்பான சாலையில் விழுந்து விபத்து ஏற்படுத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
பிரேசிலின் சாவோ பாலோவில் வெள்ளிக்கிழமை காலை ஒரு பரபரப்பான சாலையில் சிறிய விமானம் ஒன்று பேருந்து மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
சாவோ பாலோவிலிருந்து போர்டோ அலெக்ரேக்குச் சென்ற Beech F90 கிங் ஏர் விமானம், Marques de Sao Vicente அவென்யூவில் விபத்துக்குள்ளாகி, பின்னர் பேருந்துடன் மோதியது.
Footage of the moment an airplane crashed into a bus with passengers in Brazil
— NEXTA (@nexta_tv) February 7, 2025
According to local media, the plane tried to make an emergency landing and crashed on the roadway, hitting several other vehicles. At least two people died. pic.twitter.com/733NTM1daQ
விமானத்தின் விமானி மற்றும் துணை விமானி இருவரும் விபத்தில் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பாக சாவோ பாலோ கவர்னர் Tarcisio de Freitas தனது சமூக ஊடகப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து, இதனை "துயரமான விமான விபத்து" என்று குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் மற்றும் சிதிலடைந்த பாகங்களால் தாக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தவர்களில் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் மேலும் நான்கு பேர் லேசான காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |