தெற்கு சூடானில் விழுந்து நொறுங்கிய விமானம்: இந்தியர் உள்பட 20 பேர் பலி
தெற்கு சூடானில் விமானம் விழுந்து நொறுங்கியதில் இந்தியர் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு சூடானின் யூனிட்டி (Unity) மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிய ரக விமானத்தில் 2 விமானிகள் உள்பட 21 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானத்தை சீன எண்ணெய் நிறுவனமான Greater Pioneer Operating Company (GPOC) வாடகைக்கு எடுத்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக யூனிட்டி மாநில தகவல் அமைச்சர் காட்வெச் பிபால் தெரிவித்தார்.
விமானம் தலைநகர் ஜூபாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானத்தில் அமர்ந்திருந்த அனைவரும் கிரேட்டர் பயனீர் ஆப்பரேட்டிங் கம்பெனியின் எண்ணெய் ஊழியர்கள் என்று பிபால் கூறினார்.
தகவல்களின்படி, உயிரிழந்தவர்களில் 2 சீனர்களும், ஒரு இந்தியரும் அடங்குவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
South Sudan Flight Crash