நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானத்தில் நடந்த கொடூரம்: உடல் சிதைந்து பலியான நபர்
ஈரானில் போயிங் பயணிகள் விமானம் ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி மெக்கானிக் ஒருவர் பலியான சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுங்கவைக்கும் சம்பவம்
ஈரானின் Chabahar Konarak விமான நிலையத்திலேயே தொடர்புடைய நடுங்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் தொழில்நுட்பவியலாளரான Abolfazl Amiri தனது வழக்கமான பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தின் வலது இறக்கையில் உள்ள இயந்திரத்தை திறந்து சோதனைக்காக இயக்கப்பட்டது. இதில் கவனக்குறைவாக நெருங்கிய அந்த மெக்கானிக், அந்த இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு பலியாகியுள்ளார்.
அத்துடன் அந்த இயந்திரம் தீ பற்றியெரிந்துள்ளது. உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்துவந்த அவசர உதவிக் குழுவினர் அந்த மெக்கானிக்கின் உடலை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஈரானிய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |