பிரித்தானிவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் மாயம்! தேடுதல் பணி தீவிரம்
பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று காணாமல் போனதையடுத்து, மீட்புக் குழுவினர் ஆங்கிலக் கால்வாயில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள வெல்லஸ்போர்னில் இருந்து இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு P-28 விமானம் ஒன்று சனிக்கிழமை காலை வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில், விமானம் கவலையளிக்கும் வகையில் காணாமல் போனது என்றும் விமானத்தை தேடும் பணி மதியம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரெஞ்சு கடலோர காவல்படை கூறியுள்ளது.
ஒரே குழியில் 300 பிணங்கள்.., உக்ரைனில் சிதறிக்கிடக்கும் அப்பாவிகளின் சடலங்கள்
இதுவரை விமானமோ, விமானத்தின் எச்சங்களோ அல்லது பாகங்களோ தேடுதல் குழுக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை காலையும் தேடுதல் தொடரும் என்றும் பிரெஞ்சு கடலோர காவல்படை கூறியது.
ஒரு பிரித்தனைய விமானத்துடன், ஒரு Falcon 50 விமானம், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் ஏற்கனவே கடலில் இருந்த இழுவை படகு அனைத்தும் இந்த தேடுதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன.
பிரித்தானியாவில் பரவும் புதியவகை கோவிட் வைரஸ்!
அப்பகுதியில் பயணம் செய்யும் அனைத்து கப்பல்களும் விமானத்தின் ஏதேனும் அடையாளங்களைத் தேடவும், ஏதேனும் கண்டால் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய வானில் தெரிந்த நெருப்பு மழை! உண்மையில் அது என்ன? வைரலாகும் வீடியோக்கள்