சொகுசு விடுதிகளாக மாறிய விமானங்கள்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க முன்னெடுக்கப்பட்ட திட்டம்
அர்ஜென்டினாவில் ஓய்வு பெற்ற இரண்டு விமானங்களை சொகுசு விடுதிகளாக மாற்றி சொகுசு விடுதிகளுக்கான புதிய பரிணாமங்களை திறந்து வைத்துள்ளனர்.
சொகுசு விடுதிகளாக மாறிய விமானங்கள்
அர்ஜென்டினாவில் செயல்பாட்டை நிறுத்திக் கொண்ட இரண்டு வர்த்தக விமானங்கள் “ஏர் டமாஸ்கோ”(Air Damasco) என்ற பெயரில் புதிய தனித்துவமான சொகுசு விடுதியாக மாற்றப்பட்ட நிலையில், சொகுசு விடுதி மீதான கருத்தியலை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஆர்ஜெண்டினாவின் கோர்டோபாவில்(Cordoba) உள்ள ஒண்கடிவோவில்(Oncativo) ஏர் டமாஸ்கோ விமான சொகுசு விடுதி அமைந்துள்ளது.
சொகுசு தங்கும் விடுதிகள்
இரண்டு விமானங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு விடுதியில் ஒவ்வொரு விமானத்திலும் 8 இரட்டை அறைகள் உள்ளன.
உயர்தர வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில், தனிப்பட்ட பால்கனிகள், நீர்த் தொட்டிகள், அதிநவீன குளியலறைகள் மற்றும் தனிநபர் குளிரூட்டிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
மேலும் அறையில் கிங் சைஸ் படுக்கை, ஸ்மார்ட் டிவி, வைஃபை இணைப்பு ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.
2025 ஜூலை 9ம் திகதி திறக்கப்பட்ட இந்த சொகுசு விமான தங்கும் விடுதி, தற்போது அதிகாரப்பூர்வமாக விருந்தினர்களை வரவேற்க தொடங்கியுள்ளது.
ஈகோனோவோ நிறுவனத்தின் உரிமையாளரான ஆஸ்கார் ஸ்கோர்ஸா(Oscar Scorza) இந்த திட்டத்தை முன்னெடுத்தவர் ஆவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |