இந்திய உணவுகளை ருசித்து ரசித்த ஜப்பான் பிரதமர் - வைரலாகும் புகைப்படங்கள்
இந்திய உணவுகளை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ருசித்து ரசித்தார்.
இந்தியாவிற்கு வருகை தந்த ஜப்பான் பிரதமர்
ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியாவிற்கு வருகை தந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு கொடுத்தார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்திய உணவுகளை ருசித்து ரசித்த ஜப்பான் பிரதமர்
இந்நிலையில், பிரதமர் மோடி தன் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் நண்பர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கோல்கப்பாஸ் உள்ளிட்ட இந்திய சிற்றுண்டிகளை ருசித்துப் பார்த்து ரசித்தார்" என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், பிரதமர் மோடி ஜப்பானிய பிரதமர்களுடன் எப்போதும் நெருங்கிய உறவை அனுபவித்து வருகிறார் என்றும், முன்னாள் ஜப்பான் பிரதமரும், மறைந்த ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி மிக நெருக்கமான நட்பை வளர்த்து வந்தார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
My friend PM @kishida230 enjoyed Indian snacks including Golgappas. pic.twitter.com/rXtQQdD7Ki
— Narendra Modi (@narendramodi) March 20, 2023