மோனாலிசாவுடன் புகைப்படம், புகழ்ப்பெற்ற அருங்காட்சியகத்தில் டின்னர்; மோடியின் பிரான்ஸ் பயணம்
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் பிரான்ஸ் பயணம் அடுத்த வாரம் தொடங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன், அவர் பாரிஸின் முன்னணி கலை அருங்காட்சியகமான லூவ்ரேவுக்குச் செல்கிறார். உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவை வைத்து இருவரும் படம் எடுப்பார்கள்.
Ile Seguin தீவில் உள்ள La Seine Musiquele கலை மையத்தில் புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார். இந்த கலை மையம் பாரிஸின் மிக அழகான நதியான செய்ன் ஆற்றில் அமைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 6000 பேர் அமர்ந்து நிகழ்வை கண்டுகளிக்க முடியும்.
Reuters
பிரான்சில் இந்திய திருவிழா
பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் கலாச்சார அமைச்சகம் இணைந்து நடத்தும் 'நமஸ்தே பிரான்ஸ்' என்ற இந்திய திருவிழா தற்போது இங்கு நடந்து வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை 14-ஆம் திகதி நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். பாஸ்டில் தின அணிவகுப்பு முதன்முறையாக வெளிநாட்டிலிருந்து ஒரு சிறப்பு விருந்தினரை பங்கேற்க வைத்த பெருமையையும் பெற்றுள்ளது.
பாரிஸில் சிறப்பு இராணுவ அணிவகுப்பு
அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார். பாஸ்டில் தினத்தை ஒட்டி பாரிஸில் உள்ள Champs Elysees-ல் சிறப்பு இராணுவ அணிவகுப்பும் நடத்தப்படும். இந்திய ஆயுதப்படையின் 269 உறுப்பினர்களும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பங்கேற்பார்கள்.
Reuters
இந்திய விமானப்படையின் மூன்று ரஃபேல் போர் விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்கும். ரஃபேல் போர் விமானங்களுடன் பிரான்ஸ் போர் விமானங்களும் இணையும்.
இந்த விஜயத்தின்போது, பிரான்ஸ் அதிபரின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி மாளிகையில் பிரதமருக்கு தனிப்பட்ட இரவு விருந்தும் வழங்கப்படவுள்ளது.
இரவு விருந்தின் போது, இரு தலைவர்களும் உலகளாவிய மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள். ஜூலை 14-ஆம் திகதி பாஸ்டில் தின அணிவகுப்புக்குப் பிறகு பிரதிநிதிகள் அளவிலான விவாதங்கள் நடைபெறும்.
மோனாலிசாவுடன் புகைப்படம், புகழ்ப்பெற்ற அருங்காட்சியகத்தில் டின்னர்
லூவ்ரே அருங்காட்சியகத்தின் கோர் மார்லி முற்றத்தில் மோடிக்கு அதிபர் மேக்ரான் சம்பிரதாய விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் 250-க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள். பிரபல இத்தாலிய ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றான 'மோனாலிசா' அருங்காட்சியகத்தில் இருவரும் புகைப்படம் எடுக்கப்படவுள்ளனர். இரு தலைவர்களும் ஒன்றாக ஈபிள் டவரில் பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.
இம்மானுவேல் மக்ரோனின் தற்போதைய நிர்வாகத்தின் போது வெளிநாட்டுத் தலைவர் ஒருவரின் முதல் பாஸ்டில் டே விஜயம் என்பதால் மோடியின் இந்த பயணம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தும் என்பதால் மோடியின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |