மிகவும் ஆணவமாக பேசிய பிரதமர் மோடி! மேகாலய கவர்னர் வேதனை
பிரதமர் நரேந்திர மோடி ஆணவத்துடன் பேசியதாக, மேகாலயா கவர்னர் கூறியிருப்பது இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
அரியானா மாநிலம் தாத்ரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், நான் பிரதமர் மோடியை சமீபத்தில் நேரில் சந்தித்தேன். 5 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன். அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்று கூறினேன்.
அவர், மிகுந்த ஆணவத்துடன், அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள் என்று கேட்டார். நான் அவரிடம் ஆமாம். நீங்கள் மன்னராக இருப்பதால் உங்களிடம் தெரிவித்தேன். அவருடன் நான் வாக்குவாதம் செய்தேன்.
அவர் உடனே நீங்கள் அமித்ஷாவை பாருங்கள் என்று கூறினார். நானும் அமித்ஷாவை பார்த்தேன். அமித்ஷாவோ ஒரு நாய் இறந்தாலும் கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார் என்று கூறியதாக தெரிவித்தார்.
மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய இந்த வீடியோவை காங்கிரஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதால், இது இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.